தீபங்களின் ஒளியால்
வண்ண மத்தாப்பின்
வர்ணஜாலத்தினால்
நம் வாழ்வில் இருள் விலகி
இல்லாமை மறைந்து
தீயவை துலைந்து
நல்லவை கூடி
தடைகள் தாண்டி
இன்பங்கள் பெருகிடவும்
நேசம் வளர்த்து
சொந்தங்கள் கூடி
நண்பர்கள் சேர்த்து
உள்ளதை பகிர்ந்து
மகிழ்ச்சியில் திளைத்து
இனிப்புகள் உண்டு
ஆரோக்கியம் கண்டு
உள்ளங்கள் நிறைக்கும்
இனிய தீபாவளி
திருநாள் வாழ்த்துக்கள்!
அசுரன் அழிந்து
ஆனந்தம் கிடைத்ததை போல
நம் வாழ்வில் உள்ள
எல்லா தடை கற்களும்
படிக்கற்களாக மாறி
துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் மலர
எனது மனமார்ந்த
இனிய தீபஒளித் திருநாள்
நல்வாழ்த்துக்கள்!!
வெடித்து சிதறும் பட்டாசுகள்
போல் உங்கள்
கவலைகளும் கஷ்டங்களும்
வெடித்து சிதறட்டும்
பூத்து குலுங்கும் மத்தாப்பு
போல் உங்கள் வாழ்க்கையில்
மகிழ்ச்சி பூக்கட்டும்
உங்கள் அழகான குடும்பத்திற்கு
தீபாவளி நல்வாழ்த்துக்கள்